முகத்தை மூடுதல்
கண்மூடித்தனமாக விமர்சிக்க வேண்டாம்
இஸ்லாம் ஒழுக்கத்தையும் பண்பாடுகளையும் வற்புறுத்தும் மார்க்கமாகும். ஆண் பெண் கலப்புக்களை தடைசெய்யும் அனைத்து வழிகளையும் மிகத்துள்ளியமாக இனங்காட்டியுள்ளது. அதன் சட்டங்களை ஒருவர் தெளிவாக விளங்கிக்கொள்ள அதன் ‘முஹ்கமாத்’ ‘முத~hபிஹாத்’ என்ற அல் குர்ஆன் ஆயத்துக்களை ஸஹாபாக்கள், தாபிஈன்கள் புரிந்துகொண்டதைப் போன்று புரியவேண்டும். எனினும் அதற்கான விளக்கங்களைக் கவனமாகப் புரிதல் வேண்டும்.
பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயமாகும் என்ற கருத்தையும், மூடுவது ஸ{ன்னா அல்லது ‘முஸ்தஹப்பு’ (விருப்பத்திற்குரியது) எனும் கருத்தையும் சன்மார்க்க அறிஞர்கள் கொண்டுள்ளனர். கட்டாயம் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவது கட்டாயம் என்பார்கள். மற்றைய கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தமது கருத்தின் புரிதலின் அடிப்படையில் செயற்படுவார்கள். எனினும் எவரும் இதனை கண்மூடித்தனமாக விமர்சிக்கவோ, தூற்றவோ, ஜாஹிலிய்ய நடைமுறை என்று பேசியதோ கிடையாது. அவரவர் அல் குர்ஆன், ஸ{ன்னாவினைப் புரிதலுக்கு ஏற்ப செயற்பட்டனர். கட்டாயம் என்ற கருத்துடையோர், மூடாதவர்களை மூடர்கள் என்றோ, திறந்திருந்தோர் ஜாஹிலியர் என்றோ தர்க்கித்துக் கொள்ளவும் இல்லை. அவர்களோ முஜ்தஹித் என்ற தரத்தை உடையோராக இருந்தனர் என்பதும் கவணத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
முகத்தை மூடுவது கட்டாயமானதல்ல ஆனால் அது ஒரு ஸ{ன்னா என்ற கருத்தில் இருந்த நவீன காலத்து அறிஞர்களுள் அல்லாமா நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் தமது ‘முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப்’ என்ற மிகப் பிரபல்யமான ஆய்வு நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள் :
‘எனது புத்தகம் பெண்கள் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று நான் அறிந்து கொண்டேன். எனினும் பல பெண்கள் முகத்தை மறைத்தலை ஒரு நற்காரியமாகவும், ஒழுக்க விழுமியமாகவும் கண்ட போது, தமது முகங்களை மறைத்துக் கொண்டனர். அது ‘ஸலஃபுஸ் ஸாலிஹீன்’களின் சிறந்த தாய்மார்களினதும் நடைமுறையாகும். அதிலும், குறிப்பாக ‘உம்மஹாத்துல் முஃமினீன்’ (ரழியல்லாஹ{ அன்ஹ{ன்ன) எனும் முஃமிகளின் தாய்மார்களான அருமை நபி (சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்களது பரிசுத்த மனைவிமார்களும் அடங்குவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஜில்பாபில் மர்அத்தில் முஸ்லிமா).
முகத்தை மறைத்தல் கட்டாயமானதல்ல என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும், அது பாவமானது, ஜாஹிலிய்ய காலத்து நடைமுறை என்றோ அல்லது நாகரிகம் தெரியாத அநாகரிகவாதிகளின் நடைமுறை, கட்டாயப்படுத்தப்படாத ஓர் அம்சம் என்றோ நம்மில் பல நுணிப்புல் அறிஞர்கள் பிரச்சாரம் செய்வதைப் போன்று அல்லது எழுதித் தள்ளுவதைப் போன்று ஒருபோதும் வன்மைக் கருத்தினை வெளிப்படுத்தவில்லை.
மாறாக அது முஃமிகளின் தாய்மார்களதும் முற்காலத்து பத்தினித்தாய்மார்களது சிறந்த முன்மாhதிமிக்க நடைமுறையாகும் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். இதுதான் ஒரு முஃமினின் குறிப்பாக அறிவு பெற்றவர்களின் அணிகலன்.
த்துடன், எந்த மார்க்க அறிஞரும் மறைத்தலை விட திறத்தல் சிறந்தது என்ற கருத்தினை எங்கும் குறிப்பிடவில்லை. அவ்வாறு கருதுவது, மேற்குலகை திருப்திப்படுத்துவோர் மாத்திரமேயாகும்.
இவ்வாறிருக்க, பெண்கள் முகமூடி அணியவேண்டிய கட்டாயம் இல்லை என்பதை ஊடகங்கள் மூலமும கொத்பாக்களிலும் ஜம்இய்யத்துல் உலமா அறிவித்திருந்தால் முகமூடும் பழக்கம் இலங்கையில் ஏற்பட்டிருக்காது என்று சாதாரண பொது அறிவுப் பிண்ணனி கூட இல்லாமல் நம்மில் சிலர் கருத்துச் சொல்கின்றனர்.
அறைகுறை ஆடைகளோடு அலையும் ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் முழுமையாக மறைத்துக் கொள்ளும் உரிமையை ஒரு முஸ்லிம் தாய் பெற்றுச் சுதந்திரமாக தனது மார்க்க அணுஸ்டானங்களை அமுல்படுத்தும் வேலை, இலங்கை நாட்டுக்கு இந்நடைமுறை வந்திருக்கவே கூடாது என்னும் அளவுக்கு, அதனை நாட்டில் இல்லாதொழிக்க வழங்கப்படும் ஒரு குறுகிய வட்டச்சிந்தனையும் அபிப்பிராயமுமேயாகும்.
இவ்விவகாரத்தைப் பிழையாக சிலர் விளங்கிக் கொண்ட காரணத்தினால் இஜ்மாஃ, கியாஸைப் பயன்படுத்தி மக்களைப் பலிக்கடாக்களாக மாற்றப்படுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் இவ்விவகாரம் அல் குர்ஆனையும் ஸ{ன்னாவையும் இமாம்களன் புரிதலில் ஏற்பட்ட வித்தியாசமான விளக்கங்களே அன்றி, இஜ்மாஃ, கியாஸ் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவன்று.
எவராலும்; வலிந்து அறிமுகம் செய்யப்பட்ட ஒரு செயலை தவிர்த்துக் கொள்ளாது, பிடிவாதமாக நின்று அதனை சரிகண்டு மக்களைப் பலிக்கடாவாக்கு முயற்சியல்ல இது. அவ்வாறு செய்ய வேண்டிய தேவையும் கிடையாது.
தீவிரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் மேற்படி ஆடையை அணிந்து குற்றச் செயற்களில் ஈடுபடுகின்ற காரணத்தினால் இதனை அவசரம் காட்டக்கூடாது என்று சிலர் கருதுகின்றனர். இவ்வாறான தீயசெயற்களில் ஈடுபடுவோர்கள் இராணுவம், பொலிஸ், கடற்படையினரின் ஆடையணிந்து புலித்தாக்குதல்களில் ஈடுபட்டனர் என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும் எவரும் இராணுவத்தினதோ பொலிஸாரினதோ ஆடையை தற்காலிகமாயினும் மாற்றிக் கொள்ளுங்கள் என்ற அபிப்பிராயத்தைச் சொல்லவே இல்லை. மாறாக அத்தீயவர்களையே இல்லாதொழிக்க ஆலோசனை வழங்கினர். அது மாத்திரமே புத்திசாதுர்யமான ஆலோசனையாகும். மாறாக முகமூடுபவர்களை அனுமதித்தால் குற்றச் செயற்கள் அதிகரிப்பதற்கான எச்சாத்தியமும் இல்லை. பொதுவாக முகமூடும் பெண்கள் தனிமையில் பயணம் மேற்கொள்வதில்லை, அவ்வாறான வழமையும் சமூகத்தில் இல்லை. அவ்வாறு தனித்து சுற்றித்திரிபவர்களை பாதுகாப்புப்படையினர் மாத்திரமல்ல ஒவ்வொரு முஸ்லிமும் அவதானிக்க கடமைப்பட்டுள்ளார்.
ஒரு ஆசிரியர் தப்பாக காதலியை அழைத்துச் சென்றார் என்பதற்காக உளமாற விரும்பி அணியும் பெண்களையெல்லாம் குற்றக்கூட்டில் நிறுத்த முடியுமா?
‘60 வருடங்களுக்கு முன்னர் பெண்கள் ‘துப்பட்டா’ அணிந்து நெட்துணியால் முகத்தை மூடியவராரே வெளியில் சென்றார்கள்’ என்று முற்காலத்திலும் முகமூடும் பழக்கம் இருந்துவந்தது என்பதை ஏற்றுக் கொள்வோர், ஏன் இப்போது மாத்திரம் இது சாத்தியமற்றது என்பதாகவும், நாட்டிலுள்ள தீயசெயற்பாடுகள் எல்லாம் நீங்குமா? நீங்கும் வரை அதனை அமுல்படுத்துவது சாத்தியமா? nhதிழுல்குச் செல்லும் போது மாற்றுமதத்தவர்கள் வெளிநடப்புச் செய்தால் என்ன செய்வது? முகத்திரை அணிவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்ற அறிவியல் ரீதியில் கொடுத்திருக்க வேண்டுமாம் என்றெல்லாம் கருத்துச் பேசித்திரிவதன் நோக்கம் மேற்கத்திய சிந்தனையையும் கலாசாரத்தையும் விரும்புவதால் இதனைப் பார்க்க ஒவ்வாமையாகத் தெரிகிறது என்பது மட்டுமே அடிப்படையாகும்.
முகமும் மணிக்கட்டுப் பகுதியும் :
முகமும் மணிக்கட்டுப் பகுதியுமே கருத்து Nவுற்றுமைக்குள்ள பகுதியாகும். எனவே, முதலில் மார்க்கத்தைப் புரிந்து கொள்வது எப்படி என்பதை விளங்கிக் கொண்டால் இவ்வாறான கருத்து வேற்றுமையுடைய விவகாரங்களை இலகுவில் புரிந்து கொள்ளலாம். ஒரு விவகாரத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதனை ~ரீஆவுடைய ஆலிம்களிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். மாற்றமாக மனோஇச்சையின் அடிப்படையில் தீர்வு சொல்ல போகாதீர்கள். அது பாரிய இழப்புக்களையும் அபாயங்களையும் ஏற்படுத்தும்.
இமாம் புகாரீ (ரஹிமஹ{ல்லாஹ்) அவர்கள் பின்வரும் ஹதீஸைப் பதிவு செய்திருக்கிறார்கள். ‘யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடியவர்கள் தோன்ற முன்னர் அறிவைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று உக்பத் இப்னு ஆமிர் (ரழியல்லாஹ{ அன்ஹ{) குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் நவவி (ரஹிமஹ{ல்லாஹ்) அவர்கள் இதற்கு விளக்கம் சொல்லும் போது: ‘அறிவை தகுதியும் பேணுதலும் உடையவர்கள் மரணிப்பதற்கு முன்னர் அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பின்னர் தமது மனோவிச்சையின் அடிப்படையிலும், சுய எண்ணங்களின் அடிப்படையிலும் பேசக்கூடியவர்கள் தோன்றிவிடுவார்கள். அவர்களது கருத்துக்களுக்கோ அபிப்பிராயங்களுக்கோ எந்த அடிப்படையு; இருக்காது’ என்று விளக்கமளித்துள்ளார்கள். (அல் மஜ்மூஉ, பாகம்: 01, பக்கம்:41).
இன்று சிலர் குறிப்பாக மேற்கத்திய சிந்தனைத் தாக்கத்தால் கவரப்பட்டவர்கள், அல் குர்ஆனுக்கும் ஹதீஸ{க்கும் தமது மனோவிச்சைப்படி கருத்துச் சொல்லவும் விளக்கமளிக்கவும் முற்பட்டுள்ளமை சமூகத்தை மிகப்பெரிய அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. இவ்வாறான மார்க்க அறிவின் அடிப்படைகள் ஏதுமின்றிப் பேசுபவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தில் கைவைத்த குற்றத்தை சுமக்க நேரிடும்.
‘தங்கள் அலங்காரத்தை அதினின்று (வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ள வேண்டும்’. (அந்நூர் : 31)
மேற்படி வசனத்துக்கு இரண்டு கருத்துக்கள் உள்ளன. ஒன்று அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், மற்றொன்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹ{ அன்ஹ{மா) இவ்விருவரும் தஃப்ஸீர் துறையில் மாமேதைகள். இருவருக்கும் ஸஹாபாக்கள், தாபிஈன்கள் எனப் பல மாணவர்களும் உள்ளனர்.
இவ்விரு ஸஹாபாக்களில் விளக்கங்களுக்கே தஃப்ஸீர் உலகம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது ‘அஹ்லுஸ் ஸ{ன்னா’க்களின் ஏகோபித்த கருத்தாகும். இவ்விருவரும் எங்கும் பெண்களின் முகம் ‘அவ்ரத்’ அல்லவென்றோ, திறக்கப்பட்டே ஆகவேண்டும் என்றோ அல்லது திறக்கப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருப்பதை விடச் சிறந்தது என்றோ குறிப்பிடவில்லை. அவர்களும் மறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தினையே கொண்டிருந்தனர்.
எனினும், பெண்களின் அலங்காரத்தில் வெளியில் தெரியக் கூடிய என்ற அர்த்தத்தைக்; கொடுக்கும் ‘மா ளஹர மின்ஹா’ என்ற வசனத்தின் கருத்திலேயே கருத்து வேற்றுமைப்பட்டுள்ளனர். வெளியில் தெரியக் கூடியது என்பதற்கு முகமும் மணிக்கட்டும் என்று, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழியல்லாஹ{ அன்ஹ{) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹ{ அன்ஹ{) முகமும் மணிக்கட்டும் மறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். மேற்கத்திய சிந்தனைவாதிகளின் தஃப்ஸீர்களினைத் தவிர்த்த முன்னைய இமாம்களது நம்பத்தகுந்த அனைத்து தஃப்ஸீர்களிலும் இவ்விளக்கமே கொடுக்கப்பட்டுள்ளது.
‘ளஹர’ என்ற சொல்லின் கருத்து வெளிப்பட்டது என்பதாகும். அதாவது தானாக வெளிப்பட்டது அது அப்பெண்ணின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது என்ற கருத்தைக் கொடுக்க முடியாது. இக்கருத்திலிருந்து சிந்தித்துத் பார்த்தால் முகத்தை மூடவேண்டும் என்ற வாதத்தைக் கொண்டவர்களின் கருத்தே மிகைப்பதாக தெரிகிறது.
எது எப்படியோ இது ஸஹாபாக்களின் கருத்Nதுயன்றி ஜாஹிலிய்ய காலத்து சிந்தனையோ செயற்பாடோ அல்ல என்பதையும், இவ்விவகாரம் ஓர் இயக்கம் - ஜமாஅத்துக்கோ மத்ஹபுக்கோ சொந்தமான ஒன்றல்ல என்பதை கலாநிதிகளும், சட்டத்தரணிகளும் முதலில் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளார்கள்.
அவ்வாறு ஓர் இயக்கத்துக்கு மாத்திரம் சொந்தமானது என்று வாதிடுவோர்கள்; இவ்வியக்கங்கள் தோன்ற முன்னரே அரபு நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளிலும், இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் பத்தினிகளான பல முஸ்லிம் பெண்கள் முகத்தை முறைத்தல் என்ற இந்நடைமுறைமையைப் பின்பற்றிவருகின்றனரே இதனை எந்தப் பின்ணணியில் நோக்குவது என்பதைத் தெளிவு படுத்தக் கடமைப்பட்டுள்ளனர் என்பதை நினைவு படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
பெண்களின் முகம் அலங்காரமாக அல்லாஹ் இங்கு குறிப்பிட்டுக் காட்டவில்லை என்று தர்ஜமத்துல் குர்ஆனைப் பார்த்து விளக்கமளிப்போருக்கு, பெண்களின் பாத அணிகலனான கொலுசு, போன்றவற்றிலிருந்து வெளிப்படும் சப்தத்தை கூட அல்லாஹ் ‘அவ்ரத்’ மறைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றபோது, பெண்ணின் அலங்காரமும் வசீகரமும் கொண்டதாகப் படைக்கப்பட்டுள்ள அவர்களது முகம் ‘அவ்ரத்’ அல்ல என்பதாக வலிந்துரை சொல்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதனைப் பின்வரும் வசனம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
‘தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்’. இவ்வசனத் தொடர் சலங்கைகளின் சப்பதத்தைக் கூட அலங்காரம் எனும் போது, ஒரு பெண்ணின் முகம் அலங்காரம் அல்ல என்று வலிந்துரை செய்வது அறிவுடைமையாகுமா?
ஒரு பெண்ணின் முகத் தோற்றத்திலிருந்தே அவளை தீர்மாணித்துக் கொள்ளலாம் என்பது சன்மார்க்க சட்ட அறிஞர்களான ஃபுக்காஹ்களின் கருத்தாகும். எனவே தான் திருமணம் பேச்சுவார்த்தையின் போது, மணமகன் ஒரு பெண்ணைப் பார்க்க நாடினால், அவளது முகத்தைப் பாhத்துத் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற சட்டத்தை வகுத்தனர். அவளது அலங்காரம் அவளது மார்புப் பகுதியில் இருந்திருக்குமாயில் வேறு விதமாகச் சட்டமியற்றியிருப்பார்கள்.
ஒரு பெண் தனது கால்பாதம், தலைமுடி போன்றவற்றை அன்னிய ஆண்களுக்கு முன்னால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஏகோபித்த சட்டத்தை ஃபிக்ஹ{ சட்ட வல்லுனர்களான புக்கஹாக்கள் சொல்லியுள்ளார்களே? ஒருவளின் கால்பாதத்தை விடவும் அவலட்சனமானதா ஒருவரின் முகவழகு?.
ஆயி~ நாயகி (றழியல்லாஹ{ அன்ஹா) அவர்கள் பற்றி நயவஞ்சகர்கள் இட்டுக்கட்டிய செய்தியில் இருந்து, பெண்கள் முகத்தை மூடிக் கொள்வது பத்தினிகளான உம்மஹாத்துல் முஃமின்களினதும், ஸஹாபியத் தாய்மார்களது முன்மாதிரிமிக்க சிறந்த நடைமுறையாகும் என்பதை சஹீஹ{ல் புகாரியின் 4750, சஹீஹ் முஸ்லிமின் 2770 வது சஹீஹான ஹதீஸ்கள் உறுதியிட்டுக் கொண்டிருக்கிறன என்பதை கவணத்தில் கொள்க (தமிழ் மொழிபெயர்ப்பிலும் உண்டு).
மேற்படி சம்பவத்தின் தேவையான பகுதியை மாத்திரம் சுருக்கமாக பின்வருமாறு குறிப்பிடலாம் ‘படை சென்றதற்குப் பிறகு, (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறிவிட்டுச் சென்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருட்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.
அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை பார்த்தார். ஆகவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார்.
அவர் என்னை அறிந்துகொண்டு ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு, நான் கண்விழத்தேன். உடனே, (உறக்கத்தில் விலகியிருந்த) எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்’ (தேவையான பகுதி மாத்திரம்).
பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருக்கிறார் என்ற செய்தியின் ஊடாக, அதன் பிறகு அவரோ ஏனைய அன்னிய ஆண்களோ என்னைப் பார்த்தது கிடையாது என்பதை விளங்கமுடிகிறது. அதாவது பர்தாவுடைய ஆயத்தின் நோக்கமே மறைத்தல் வேண்டும் என்ற கட்டளையாகும் என்பதை அன்னையார் கற்றுத் தருகிறார்கள்.
இரண்டாவதாக, ‘எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்’ என்ற வாசகத்தினூடாக தெளிவாகவே முகத்தை மறைத்தல் என்பது நல்லோர்களின் நடைமுறையாகும் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
அதிலும் ‘கிமார்’ ‘ஜில்பாப்’ என்ற இரண்டு அறிவிப்புக்கள் காணக்கிடைக்கின்றன. இதனூடாக ‘ஜில்பாப்’ என்றால் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். வேறு எவரும் விளக்க வேண்டிய தேவையற்ற அளவுக்கு விளக்கியுள்ளார்கள்.
‘ஜில்பாப்’ என்பது ஒரு பெண் தனது தலை, முகம், கழுத்து போன்ற பகுதிகளை முழுமையாக மறைத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தும் மறைப்பாகும் என்று இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தமது மஜ்மூஅத்துல் ஃபாதாவாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
‘அருமை நபி (சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்களோடு நாங்கள் இஹ்ராம் ஆடை அணந்திருந்த (முகம் திறந்திருந்த) நிலையில் பயணிகள் எம்மைக் கடந்து செல்வார்கள். அப்போது எங்களில் ஒவ்வொருவரும் தமது ஜில்பாப் என்றை முகத்திறையை கொண்டு தமது முகங்களை மறைத்துக் கொள்வார்கள். அவர்கள் எம்மைக் கடந்து சென்ற பின்னர் முகத்தைத் திறந்துகொள்வோம்’ என்று அன்னை ஆயி~h (றழியல்லாஹ{ அன்ஹா) அவர்களே அறிவித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத், அபூ தாவூத்).
‘ஒரு பெண் (முழுமையான) ‘அவ்ரத்’ எனப்படுவாள் (மறைக்கப்பட வேண்டியவளாவாள்)’ என்று அருமை நபி (சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டதை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹ{ அன்ஹ{) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி, அல் இர்வாஉல் அழீள், 01- 303)
‘நாங்கள் ஆண்களைக் கண்டால் எமது முகங்களை மறைத்துக்கொள்வோம்’ என்று அஸ்மா பின்த் அபிபக்ர் (றழியல்லாஹ{ அன்ஹா) அறித்துள்ளார்கள். (ஹாகிம், தஹபி, அல் இர்வா, 4- 212).
தம்மை அறிவாளிகள் எனக்கருதும் பலர் இது அருமை நபி (சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்களது மனைவிமார்களுக்கு மட்டும் சொந்தமானது ஏனைய பெண்கள் அணிய முடியாது என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அஸ்மா பின்த் அபிபக்ர் (றழியல்லாஹ{ அன்ஹா) அவர்கள் நபியவர்களது மனைவிமார்களில் அடங்கமாட்டார்கள். எனவே, பொதுவான ஒரு நடைமுறையாகும் என்பதையும் கவணத்தில் கொள்ளவேண்டும்.
பெண்கள் முகத்திறை அணிய வேண்டும் என்று சொல்லும் இமாம்களில் சில முக்கியமானவர்கள் :
இமாம் அபூ பக்ர் அல் ராஸி (ஹி 370) அஹ்காமுல் குர்ஆன், 3-371.
இமாம் அபூ பக்ர் இப்னுல் அரபி (ஹி 543) அஹ்காமுல் குர்ஆன், 3-616.
இமாம் நவவி (ஹி 676) அல் மின்ஹாஜ்
இமாம் நஸபி (ஹி 701) மதாரிக்குத் தன்ஸீல், 3-79
இமாம் ரமலி (ஹி 1004) ~ர்ஹ{ல் மின்ஹாஜ்
இமாம் அல் அவ்ஸாஈ நிஹாயத்துல் மின்ஹாஜ், 06-187.
இமாம் இப்னு தைமிய்யா (ஹி 728) மஜ்மூஉல் ஃபதாவா, 24-382.
இமாம் இப்னு ஜஸ்ஸி(ஹி 741)அத் தஸ்ஹீல் லிஉலூமித் தன்ஸீல்,3-144.
இமாம் இப்னுல் கைய்யிம் (ஹி 751) இஃலாமுல் மூகிஈன், 02-80
இமாம் தகியுத்தீன் அல் ஸ{ப்கி (ஹி 756) நிஹாயத்துல் முஹ்தாஜ்,6-187.
இமாம் இப்னு ஹஜர் (ஹி 852) ஃபத்ஹ{ல் பாரி, 8-347.
இமாம் ஸ{யுத்தி (ஹி 911) அவ்னுல் மஃபூத், 11-158.
இவர்களுடன், நவீன காலத்து பல்துறைகளில் மாமேதைகளான அப்துர் ரஹ்மான் அல் ஸஃதி, முஹம்மத் இப்றாஹிம் ஆல் i~க், அல் ~ன்கீத்தி, பின் பாஸ், அபூ பக்ர் அல் ஜஸாயிரி, இப்னு உஸைமீன், இப்பு ஜிப்ரீன், அல் ஃபவ்ஸான், பக்ர் பின் அபூ ஸைத் (ரஹிமஹ{முல்லாஹ்) இவர்களில் சிலர் இன்னும் வாழ்கின்றனர்.
பட்டியல் நீண்டுவிடும் என்பதற்காக சுருக்கப்பட்டுள்ளது. இவர்கள் எவரும் மேற்படி கலாநிதிகள், சட்டத்தரணிகள் குற்றம் சாட்டுவதைப் போன்று குறிப்பிட்ட ஓர் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். அல்லாஹஹ்வின் மார்க்கத்திற்காகவே வாழ்ந்து அதற்காகவே மரணித்த மாமேதைகள்.
இஸ்லாமிய பண்பாடு, நாகரிகம், கலாசாரம், சட்டவியல், அரசியல் மற்றுமுண்டான அனைத்தும் முக்காலத்திற்கும் எத்துருவத்திற்கும் இனங்கிப் போகும் ஒன்றாகும்.
‘எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்’ (24:23)
‘எதைபப் பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்’ (07:36).



