குறிப்பாக நான்கு முஜ்தஹிதான இமாம்கள் மற்றும் ஏனைய சட்டவல்லுனர்களின் தொகுப்புக்களாகப் பாதுகாக்கப்பட்டு உலக முஸ்லிம்களால் மரியாதை கலந்த பாதுகாப்பில் உள்ளது என்பது புதுக்குருதி சின்னஞ்சிறார்களுக்கும் தெரியும்.
அன்னாற வாழ்வில் ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது, ஒரு சாதராண முஸ்லிம் கூட பிக்ஹின் ஒளியிலேயே அதற்கான தெளிவினைத் தேடமுற்படுவதும் பிக்ஹு சட்டம் கற்றுத்தேறிய ஓர் அறிஞரிடம் அது பற்றித் தெளிவுபெற எத்தனிப்பதும் உலக முஸ்லிம்களின் வழமையாகும்.
ஒரு சிலர் தம்மை அஹ்லுல் ஹதீஸ் என்று இனம்காண்பித்த போதிலும் அவர்களால் பிக்ஹை விட்டும் செல்ல முடியாதுள்ளது.
எனவேதான் தமது நூலகங்களில் பிக்ஹு நூல்களை சேமித்துவைத்துள்ளனர். இல்லையெனில், அல் குர்ஆனையும் ஆறு ஹதீஸ் கிரந்தங்களையும் மாத்திரமே அவர்கள் நூலகங்களிள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். ஏன் பிக்ஹு நூல்களை பாதுகாத்து வைத்துள்ளனர்?
ஒருவர் பிக்ஹின் பெறுமதியை விளங்கிக்கொள்வதற்கு தனக்குத் தெரிந்த தன்னோடு குரோதநிலையில் உள்ள ஒருவரைப் பார்த்துப் புரிந்துகொள்ள எத்தனிக்கக்கூடாது; மாறாக, முஜ்தஹிதான இமாம்களின் அறிவு ஆளுமை, இஜ்திஹாத் திறனாய்வு, நினைவாற்றல், வணக்க வழிபாடுகள், இராவணக்கங்கள், இறைதியானம் மற்றும் பண்பாட்டு நாகரிகம் அவர்கள் கொண்டிருந்த ஒழுக்கவிழுமியங்கள் போன்றவற்றின் ஊடாகவே நோக்க வேண்டும்.
இதுவே ஓர் அறிஞருக்கான அணுகுமுறையாகும்.
அதனை விட்டு விட்டு, எவரோ ஒருவர் தனக்குப் பரிட்சயமில்லாத ஒரு கருத்தினை முகநூலில் அல்லது சமூகவலைத்தளங்களிள் பகிர்ந்துவிட்டதும் அவரை ஒரு சட்டவல்லுனரின் இடத்தில் வைத்து நோக்குவதும் ஒட்டுமொத்த பிக்ஹு மற்றும் புக்கஹாக்களை ஏளனமாகப் பேசுவதும் ஆபத்தானவையாகும்.
மஞ்சள் பத்திரிகை அல்லது மஞ்சள் இதழ் என்பது பெருமளவாகவோ முழுதாகவோ பொய்கலந்த செய்தியுடன், வெறும் கவர்ச்சிக்காகத் தலைப்பிட்டு இலாபம் ஈட்டும் நோக்கோடு வெளிவரும் ஒரு வகையான இதழாகும்.
இதனை நச்சு இதழ் என வகைப்படுத்துகிறார்கள்.
பொதுவாக மிகைப்படுத்திய செய்திகள், புரட்டான செய்திகள், கிளர்ச்சியூட்டும் செய்திகள் கொண்டவையாகயிருக்கும்.
ப்ராங்க் லூத்தர்மோட் (1941) வரையறையின் படி மஞ்சள் இதழின் ஐந்து பண்புகள் பின்வருமாறு :
• சிறிய செய்தியாக இருந்தாலும் அச்சுறுத்தும் பெரிய தலைப்பிடல்.
• படங்களையும் வரைபடங்களையும் பகட்டாக வெளியிடல்.
• போலிவல்லுநர்கள் மூலம் போலியான நேர்காணல்கள், தவறான தலைப்பு, போலி அறிவியல், தவறான தகவல்களிடல்.
• நகைப்பூட்டும் பட்டைகளுடன் முழுவண்ண ஞாயிறு சேர்க்கைகள்.
• அமைப்புக்கு எதிராகபோராடி தோல்வியுற்றவர் மூலம் அனுதாபம் ஈட்டல்.
சகேதரர் யாஸிர் ளஹீர் அவர்களின் அல்லது அவர் போன்ற நவீனத்துவம் பேசுவோர் பார்வையில் எமது பாரம்பரிய பிக்ஹு நூல்கள் எவ்வகையான வரையறையின் பிரகாரம் மஞ்சள் புத்தகமாக கனிக்கப்படுகிறது? மஞ்சள் புத்தகம் என்று வரணித்து கேவலப்படுத்தியது எத்தகைய பிக்ஹை என்பதை பகிரங்கமாக சொல்ல முடியுமா?
மஞ்சளித்துப் போன உங்கள் பழைய பிக்ஹு புத்தகங்கள் என்று நாடப்படுபவை எவை?
சிறப்புவாய்ந்த இக்கலையை இவ்வாறு கொச்சைப்படுத்துவது தகுமானதா?

No comments:
Post a Comment