Wednesday, January 20, 2021

முல்லாக்களைக் கேவலப்படுத்தும் கல்லாதார்


முல்லா என்ற சொற்பதம் அல் குர்ஆனையும் ஹதீஸையும் ஏனைய சமய சட்டங்களையும் கற்று பிறருக்கும் அவற்றைக் கற்றுக்கொடுத்து சன்மார்க்கத்தைப் பாதுகாக்கும், தீன் பணிபுரியும் ஆலிம்களையே அது குறிக்கும்.

இச்சொற்பதம் ஈரான், இராக், துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிள் பயன்பாட்டில் உள்ளது.

அல்லாமா முல்லா அலீ காரி போன்ற மாமேதைகள் இப்பதம் கொண்டு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆலிம்களையும் கற்றோரையும் கேவலப்படுத்தும் மேற்கத்திய சிந்தனையாளர்கள் பெருகிவரும் இக்காலத்தில், முல்லாக்கள் என்று சொல்லின் அர்த்தமே புரியாத புத்திசாலிகள் சமயம்கற்ற சன்மார்க்க அறிஞர்களை குற்றவாலிக் கூண்டில் நிறுத்தி, சமூகத்தின் புறத்தோற்றத்தை சரி செய்யப் போகிறார்களாம்.

பாவம், உளவியாதியின் காரணமாய் உளத்தோற்றத்தை சரிசெய்ய முயற்சிக்க வேண்டியவர்கள் இப்போது புறத்தோற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய சட்டக்கலையை பிக்ஹுக் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. பிக்ஹுக் கலையின் பெறுமதி புரியாதவர்கள், புதியன புகுத்தி பழையன கழிக்க முற்பட்டுள்ளனர். 

புதியன எதில் புகுத்துவது? அல் குர்ஆனிலா? அல் ஹதீஸிலா? பிக்ஹு சட்டத்திலா? முக்காலத்துக்கும் முகம்கொடுக்கும் ஷரீஆவைக் கொண்ட சமூகம் எதனைப் புகுத்தவும் எதனைக் கழிக்கவும் முயற்சிக்கின்ற?

ஒரு புதிய பிக்ஹினை உருவாக்கி புதியன புகுத்தவா? அல்லது பழைய பிக்ஹின் மீது இருக்கும் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் தகர்ப்பதா இதன் அர்த்தம?

ஆலிம்கள் மீது இருக்கும் இவர்களது இறுக்கமான வரண்ட பார்வையின் காரணமாக, நல்லுபன்னியாசங்கள் கூட வரண்டவையாகவும், அவர்களை மாற்றுக் கிரகவாசிகளாகவும் 

நிறம்மாற்றிகளாகவும் வரண்ட குருட்டு விமர்சகர்களாகவும் தாலிபானிஸ கெடுபிடிக்காரர்களாகவும், துருப்பிடித்த வரட்டு அணுகுமுறையாளர்களாகவும் கினற்றுத் தவளைகளாகவும் மங்கிய புதிதிக்காரர்களாகவும் காழ்புணர்ச்சி கரையான்கள் எனவும் ஏன் மஞ்சளித்துப் போன பழைய பிக்ஹு புத்தகங்கள் என்று ஒட்டுமொத்த ஷரீஆவையே கொச்சைப்படுத்தும் அளவுக்கு எல்லை மீறியிருக்கின்றனர்.

இவர்களது மேற்சொல்லப்பட்ட நச்சுக்கருத்துக்களை விடவும் மோசமாகவா எமது ஆலிம்களும் பிக்ஹுத் துறையும் உள்ளங்களையும் உணர்வுகளையும் காயப்படுத்திவிட்டன?

ரஹ்மதன் லில் ஆலமீன் என்ற பார்வை இருந்திருப்பின் இப்படியான வன்மம் வெளிப்பட்டிராது.

உடைந்த மேற்கத்திய சிந்தனைச் தராசில் வைத்து, வக்கிர பார்வையைக் கொண்டு அளவிட்டதன் விபரீதமும் விளைவுமே இதுவாகும்.

புதுவழிகள் என்ற போர்வையில் சமூகத்திசையை மாற்றியமைக்கப் புறப்பட்டுள்ள நவீனத்துவப் போராளிகளின் திசையை நன்றாக அவதானித்து, வசைபாடலையும் அதற்கான இசைதேடலையும் புதுக்குருதி கொண்ட நவயுக ஆளுமைகளும் புத்திஜீவிகளும் நிதானமாக சமூகத்தை வழிநடாத் எத்தனிக்க கடமைப்பட்டுள்ளனர்.

காழ்ப்புணர்ச்சியை கட்டுப்படுத்தி கருத்துச் சொல்வதும் அர்த்தம் கற்பிப்பதும் ஒருவரை ஒருவர் உளப்பூர்வமாகப் புரிந்துகொள்வதுமே காலத்தின் தேவையாகும்.

அதற்காக ஆலிம்களையும் முல்லாக்களையும் இழிவாகப் பார்ப்பதும் பேசுவது விடிவிற்கான விழகள் அல்ல.

No comments:

Post a Comment

முகத்தை மூடுதல் கண்மூடித்தனமாக விமர்சிக்க வேண்டாம் இஸ்லாம் ஒழுக்கத்தையும் பண்பாடுகளையும் வற்புறுத்தும் மார்க்கமாகும். ஆண் பெண் கலப்புக்களை த...